கதை கதையாம் -

கதை  கதையாம்

    இது  என்  வாழ்க்கையில்  நடைபெற்ற. சம்பவங்களாதலால்  இனி வரும்  நிகழ்வுகள்  சிலரது  மனதை  சங்கடப் படுத்தலாம்
   மீண்டும் மீண்டும்  கூறுகிறேன்  இவை யாவும்  அந்தந்த வயதுக்கே  உரிய. உணர்வுகளை - நான்  அனுபவித்த. உணர்வுகளை - வெளிப்படுத்தும் விதமேயன்றி  யாரையும்  புண்டுத்தும்  நோக்கத்தோடு  எழுதப்போவதில்லை.
      யாரையும்  பெயர் சொல்லி  குறிப்பிடாமல்   நிஜத்தை  எழுதுவதால்  என்  தாயைப்போல்  வாழும்  பெண்கள்  இன்றைக்கு   எங்கள்   மூன்றுபேரின்  வாழ்க்கை  கதியை  உணர்ந்து  திருந்துவார்கள்  என்ற. நூலோடும்  நம்பிக்கையில்  தொடர்கிறேன்.
     என்  மரணத்திற்கு  முன்  நாங்கள்  ( அண்ணன் + தங்கை)  அனுபவித்த. வேதனைகளை  மனம்விட்டு பேசவேண்டும்  என்ற நோக்கம்  தவிர்த்து  மற்றவர்களின்  அனுதாபத்தைப்  பெற. அல்ல.
   இன்றைம. சூழலில்  யாருக்கும்  என் கோணத்தில்  என்  கதையை கேட்க ஆர்வமோ  /  நேரமோ  கிடைப்பதரிது.  அப்படி நேர்ந்தாலும்  என்னால்  இவ்வளவு  கோர்வையாகக் கூறஇயலுமா?  என்து  சந்தேகமே!
     என்  தாய்  மட்டுமல்ல. என்  தாய் மாமனும்  அதே  தவறைச் செய்து  வாழ்ந்துவிட்டுப் போய்விட்டனர்.  இதனால்  அவரது  இரண்டு  பெண்பிள்ளைகளும்  இன்று  எங்களைப் போலவே (  ஒருவரோடு  ஒருவர்  ஒட்டுதல்  இல்லாமல் விட்டேத்தியாய்)  வாழ்கின்றனர்.

  இதை  எழுதுவதால்  எங்கள்   வாழ்க்கையில்  மீண்டும்  வந்தம்  ஒளிவீசுமென்றோ  பாசம்  தாண்டவமிடுமென்றோ  எழுதவில்லை. 
  பிள்ளைகளின்  வாழ்க்கை  சீரழிய பெற்றவர்கள்  காரணமாகிவிடக்கூடாதென்ற. எண்ணமும் 
  அப்படு நேரும்போது  பிள்ளைகள்  துவண்டூவிடாமல்   எங்களின்  கதையைப் படித்து  நிமிர்ந்து  வாழ்ந்து  ஜெயித்துக்காட்ட. வேண்டுமென்ற. ஆதங்கமுமே  காரணம்.
   நன்றி.  இனி  தொடர்கின்றேன்.