பயணக் கட்டுரை
இந்த பயணக் கட்டுரை என்பது விபரம் தெரிந்து சுற்றுலா செல்லும் இடங்களைப் பற்றித்தான் எழுத வேண்டுமா என்ன?
ஹஹ்ஹாங் ! நாங்கள்லாம் யாருங்கறீங்? சும்மா 8 - வயசிலேயே வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்ட. பயணியாக்கும்! .
அம்மா ஆசிரியையாக. இருந்தமையால் மூன்று மாதக் குழந்தையிலிருந்து 5 - வயது தொடங்கும் வரை ( தலையைச் சுற்றி காதைத் தொட ட்ரெயினிங் எடுத்துக் கொண் பின்னர்) தந்தை வழி தாத்தா பாட்டியிடம் வளர்ந்தேன்
.
இன்றைய ஜோதிடம் உட்பட பல. நல்ல பழக்கவழக்கங்களுக்கு அவர்களின் வளர்ப்பே காரணம். மமகனிடம் மாதாமாதம் தரக்கூடிய. 20 - ரூபாயை மொத்தமாகக் கொடு எனக் கேட்டும் கிடைக்காமல் 200- ரூபாய்க்குப் பசுமாடு வாங்கி தனிமாட்டுப் பால் கொடுது வளர்த்த. புண்ணியாத்மாக்கள். எருமை மாட்டுப்பால் பெண் பிள்ளையை மந்தியாக்கிவிடுமென. வியாக்கியானம் வேறு.
மாதமொரு முறை வரும் பெற்றோர்களை வேடிக்கைப் பார்த்து வளர்ந்தாலும் நாலு வயதில்கூட. அப்பா வந்தால் 'யாரோடும் பேசாமல் என்னோடு மட்டும் பேசிக்கொண்டே தொட்டிலை ஆட்டி ' என்னைத் தூங்க வைக்க வேண்டுமென. போராடும் செல்லக்குழந்தையாகவே வவளர்ந்தேன்
இந்த. நாலு வயதிற்குள்ளாகவே தாத்தாவின் வானசாஸ்திர கதைகள் ( ரெட்டி குடிய. கெடுத்த. மீனு கதை இன்னம் பசுமையாக உள்ளது) பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு ஊரைச்சுற்றிய அழகுதான் இன்றும் அந்த 'சிங்களாந்தபுரத்திலேயே ' என்னை யிக்க வைக்கின்றது போலும்!
ஐந்தாவது வயதில் தாய்வழிப் பாட்டியிடும் வளர்ந்த. என்னைவிட 2 1/2 - வயது மூத்த. அண்ணன் பெற்றவர் களிடம் திரும்ப. நான் மஞ்சினி - கெங்கவல்லி சாலையில் உள்ள. தோட்டத்தில் வசிக்கும் பாட்டியோடு ஐக்கியமாகி 'ஒதியத்தூர் ' எனும் ஊரிலுள்ள. ள்ளியில் ஒன்றாம் - தலையைச்சுற்றி கையால் காதைத் தொட்டுக் காண்பித்துதான் அட்மிஷன் - சேர்ந்தேன்
தாத்தா சேலம் செவ்வாய்ப் பேட்டை ஸ்கூல் டீச்சராதலால் நானும் பாட்டியும் மட்டுமே அங்கு வசித்தோம்.
எனக்குத் தெரிந்த வரை தினந்தோறும் கதை சொல்லித்தான் என்னைத் தூங்கவைப்பார்.
அடம் பண்ணினால் காலை எட்டரை மணிக்கு வரும் ஸ்டேட் பஸ்ஸில் சேலத்திற்கு உங்க. அம்மாவிடம் அனுப்பிவிடுகிறேன் - என்று சொன்னால் போதும் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவேன். அம்மா என்றால் அத்தனை பயம்! .
இன்றும் அந்த இளமைக்கால. ஒதியத்தூர் பள்ளி மனதில் நிழலாடுகின்றது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே பெரிய ஹாலில் இருக்கும். இரண்டே ஆசிரியர்கள் மட்டும்தான்.
அந்த பள்ளியிலேயே இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே பன்னிரண்டாம் வாய்ப்பாட்டை 1 - 16 வரை பிழையில்லாமல் சொல்லும் ஒரே மாணவி நான்தானாக்கும்! ( எல்லாம் எஎங்க தாத்தாவின் கோச்சிங்காக்கும்)
அஅதனால் மாலை வேளையில் பள்ளியில் வழங்கப்பபடும் பவுடர் பாலில் எங்க பாட்டிக்கும் ஒரு பங்கு வழங்கப் படும்.
இப்போது பாட்டி பாட்டி என்று குறிப்பிட்டாலும் அவர்கள் இஇறக்கும்லரை அவர்களை பெயர்சொல்லித்தான் அழைத்தேன். 'தெய்வானையம்மா '
இப்படியாக. வளர்ந்தவேளை மூன்றாம் வகுப்பு முடித்தவுடன் நான்காம் வகுப்பு பெற்றவர்களோடு வந்து சேலம் பாலகிருஷ்ணவிலாஸில் சேர்த்தார்கள்.
இரண்டு பாட்டிகளின் அரவணைப்பில் வளர்ந்த. எஎனக்கு அம்மாவின் அதட்டலும் மிரட்டலும் பயத்தையே தந்தன.
சாப்பாடுவேறு முற்றிலுமாக. மாறிவிட்டது. காலையில் கஞ்சியோடு சாதம். மதியம் தயிர் அல்லது ஊறுகாய் சாதம். இரவு சுடு சாதத்தில் வாழைப்பழம் நெய் சர்க்கரைப் போட்டு பிசைந்து தொட்டுக்கொள்ள. தாத்தா வாங்கிவரும் பக்கோடா அல்லது மிக்சர்.
இவையெல்லாம் ஒரு வெறுப்பைத் தந்து தெய்வானையம்மா கூறிய. 'சர்க்கஸ் கேர்ல்ஸ் ' வாழ்க்கையே பராவாயில்லை என எனக்குநானே என்னுடைய. எட்டு வயதில் முடிவு செய்து சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த. 'சர்க்கஸ் கும்பலுடன் ' இணைந்துவிட. எண்ணி ஸ்கூல் போவதாகக் கூறி வீட்டைவிட்டு போய்விட்டேன். வேடிக்கை என்னவென்றாலல் அப்போதே என் கதையைக் கேட்டு என்னுடன் இரண்டு மாணவிகளும் உடன்வந்துவிட்டனர்.
அந்த மாணவிகளின் பெற்றோர்கள் சிறிது நேரத்திலேயே சிக்கிவிட்டாலும் நான் மட்டும் சிக்காமல் தப்பி ஓடிவிட்டேன்.
சிக்குனா எங்கம்மா கொன்னே போட்டுருவாங்களே என்ற. பயம்தான் காரணம்.
இன்று அன்றையதினம் எங்கெங்கு சுற்றித் திரிந்தேன் எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் இரவாகவும் பிரபாத் தியேட்டர் அருகே எங்கப்பாவைப் பார்த்துக் கத்தியழுதது நினைவிலுள்ளது.
விழப்போகும் அடிக்குப் பபயது கொண்டே வீட்டுக்குப் போனால் உறவு மொத்ததமும் சோகத்தோடு காத்திருக்க. என்னைப் பார்த்தவுடன் கட்டியணைத்து அழுது தலைக்கு எலுமிச்சை தேய்த்துக் குளிப்பாட்டி ஆலமெடுத்து என்னை சீராட்டிய சீராட்டலில் அம்மாமீதுள்ள. பயம் பத்து பர்சென்ட் குறைந்தது என்றால் மிகையாகாது.
இன்னும் சுவராசியங்கள் நிறைந்த. என் வாழ்க்கைப் பபயணத்தைத் தொடர்கிறேன்.