1978 - பிப்ரவரி 19 - ஞாயிறு காலை 3.30 -4.30 முகூர்த்தத்தில் நடைபெற்றது எங்களது திருமணம்.
என்னுடைய பதினெட்டாவது வயதில் இறைவனிடம் நான் வேண்டியபடியே தம்மடிக்காத. தண்ணியடிக்காத. லஞ்சம் வாங்காத. மாப்பிள்ளையைக் கொடுத்தார். ஆனால் என் தவறு எல்லாவற்றையும் கேட்ட நான் ஆரோக்கியத்தைக் கேட்க. மறந்ததாலோ என்னவோ சர்க்கரை நோய் தன்னுடன் கொண்டுவரும் தொந்தரவுகளை அனுபவித்தாலும் என்னையும் பிள்ளைகள் இருவரையும் படிக்கவைத்து எங்கள் முன்னேற்றத்திற்கு தக்க துணையாக. இருந்தார்.
கணவரை மட்டுமல்ல. கடவுள் எனக்கு பிள்ளைகளையும் நல்ல தோழர்களாக. அளித்துள்ளார். கணவருடன் பேசாத. ததகவல்களைக்கூட. பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வேன். மரணத்தின் பிடியிலிருந்து என்னை மட்டுமல்ல. என் கணவரையும் ( அஅப்பாவையும்) மீட்டுவந்த என் தாயுமானவர்கள் அவர்களிருவரும். '' இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா? '' எஎன்பது போல் என் இரு கண்களும் என் உடல், பொருள், ஆத்மா எங்கும் வியாபித்துள்ளன.
மகளில்லாத. குறையை போக்க வந்த. மருமகள்கள் எனக்கு கிடைத்த. வரமெனலாம். நான் அவர்களிடத்தில் இருந்திருந்தால் இந்தளவு சிறப்பாக. செயல்பட்டிருப்பேனா? என்பது சந்தேகம்தான்.
'' ராணிப் பாட்டி '' - யான. பின்தான் பெயருக்கேற்றபடி '' ராணி '' யாக. வாழ்வது போன்ற. நிறைவு.
இன்றோடு 40 - ஆண்டுகால. இல்லற வாழ்வை முடித்து 41 - வது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில் இறைவனுக்கு நன்றி கூறுவதோடு 'கேட்டதெல்லாம் கொடுத்த. இறையே எனது மரணத்தையும் இனிதாக்கி கொடு. பிள்ளைகளுக்கு எஎந்த இன்னலுமின்றி அழைத்துக்கொள்.
- என்று மகிழ்வோடு தொடர்கீறேன்.