ராய்பூர் பயணம் - ஏன் நாமும் மற்றவர்களைப் போல் பயணக் கட்டுரை எழுதக்கூடாது! என்ற. ஆவலில் எழுதியை மறுபதிப்பு போடும் முன்னரே காணவில்லையென்பதால் மீண்டும் புதிதாக. எழுதுகிறேன்.
முதன் முதலாகஎஎன் பேத்தி பிறக்குமுன் மகன் வீட்டுக்குச் செல்ல. எண்ணி 2014 - பிப்ரவரி 27 - ம் தேதி ( அன்று என் கணவரின் பிறந்தநாளும் கூட) சென்னையிலிருந்து ராய்பூர் செல்ல. பெரிய மகன் பிளைட் டிக்கட் புக் ண்ணிருந்தான். அதிகாலை பிளைட் என்பதால் சின்ன மன் சென்னை ஏர்போர்ட்டில் அட்டெண்டர் ஹெல்ப் வேண்டும் என்று சொல்லி அனுப்ப.
நடக்கத் தடுமாறும் என் கணவரோடு சிரமமில்லாமல் ராய்பூர் சென்றுவிட. ஏர்போர்ட்டுக்கு பெரியபிள்ளை வந்து அழைத்துச் சென்றுவிடவே "" பூ பிளைட் ஜார்னி இவ்வளவுதானா? "" என்று தோன்றிவிட்டது .
பேத்தியும் நாங்கள் போவதற்கு முதல்நாளே பிறந்துவிட்டாள். சென்னையிலிருந்து கிளம்ப. ஒரு வாரமாக. நாங்கள் அலட்டிய. அலட்டல் கொஞ்சமல்ல!
ஒரு ஆளுக்கு எவ்வளவு வெய்ட் கொண்டு போகமுடியும் என்பதிலிருந்து நம் பையை எப்படி சரியாக. அடையாளம் கண்டுபிடித்து எடுத்துக்கொள்வது என.இன்னபிற. சந்தேகங்களுக்கு தோழிகளின் முன் அனுபத்தைக் கேட்டு தெரிந்து கொள்வது என ஒரே அலட்டல்தான் போங்கள்!
திரும்பும் போதும் இரண்டு பிள்ளைகளும் இரண்டு ஏர்போர்ட்டிலும் உதவ. சிரமமின்றி சென்னை வந்தோம்.
பிறகு மீண்டும பேத்தியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ராய்பூர் செல்ல. பெரியவன் டிக்கெட் எடுத்து அனுப்பி விட்டான்.
சென்றமுறை செல்லும்போது காலில் அறுவைசிகிச்சை செய்ததின் காரணமாய் பிறர் உதவியின்றி சரியாக நடக்கமுடியாமலிருந்த என் கணவர் தனியாக சிறு தடுமாற்றத்துடன் நடக்க. ஆரம்பித்துவிட்டதால் இம்முறை கண்டிப்பாக ஹெல்ப்பர் உதவி வேண்டாமென்று கூறிவிட்டார்.( கெத்து? )
இம்முறை சற்று பதட்டமில்லாமல் கிளம்பினோம். சின்னவன் எங்களின் தைரியத்தைப் பார்த்து இரண்டு மணிநேரம் முன்னதாகவே - அஅப்பாவால் வேகமாக. நடக்க முடியாதென்பதால் - விட்டுவிட்டீச் சென்றுவிட்டான்.
செக்கிங் கவுண்டரில் என் கை பேக்கில் வைத்திருந்த ஒரு கிலோ பஜ்ஜி மிக்ஸும் சட்னிப் பொடியும் ( அஅவசரத்தில் விட்டுப்போய் கடைசியில் வாங்கிப் பையில் போட்டதுதான் தப்பாப் போச்சு! .
வன்முறையைத் தூண்ட உதவும் ( பாருங்கள் அதில் இரண்டிலுமே மிகாய்ப் பொடி இருக்கின்றது - என்று எனக்கு விளக்கமளித்தனர்) ஆஹா சங்கர் டத்திவ் அமெரிக்கா போகும்போதுதானே லட்சுமி ஊறுகாய் பாட்டிலை விட்டாள் . நாம. என்னடா இது உள்ளூரிலேயே பஜ்ஜி மிக்ஸை விட்டுடட்டோமே என்று நொந்து கொண்டே திரும்பினால் என்னவர் சும்மா ஜம்முன்னு செக்கிங் முடிஞ்சி சென்றமுறை ராய்பூர் சென்றபோது பிளைட் ஏறபோன. 11- ம் நம்பர் பிளாட்பாரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றார்.
அய்யையய்யோ இந்தமுறை 6- வது பிளாட்பார்ம் என டிக்கெட்டில் போட்டுள்ளதே என்று பதறி எஎன்னங்க. என்னங்க. என. கத்திக்கொண்டே பின்னாலேயே ஒடிப்போய் கூப்பிடுவதற்குள் அய்யா களைத்துப்போய் நின்றுவிட்டார்.
அந்த நேரம் பார்த்து மைக்கில் மிஸஸ் உஷாராணி நல்லையன் என்று கூப்பிடுகிறார்கள் ஆஹா என் பெயரை யாருமே இவ்வளவு அழகாய் உச்சரித்தது கிடையாதே என்றெண்ணி பூரித்த நிமிடமே பெரியவனிடமிருந்து போன்.
எங்கம்மா போய்ட்டீங்க? இன்னும் பிளைட்டுக்கு வரரலியாமே நீங்க? எனக்கு போன் பண்ணி கேக்கிறாங்கன்னு சத்தம் போட. போனை ஆப் பண்ணினால் மைக் மீண்டும் மிஸஸ் உஷாராணி நல்லையன் ( அடடா) இன்னும் ஐந்து நிமிடத்தில் வரவில்லையெனில் பிளைட் கிளம்பிடும்னு கத்தறாங்க.
என்னவரோ அசால்டாக. ஸ் மாதிரி நினைத்துக் கொண்டு இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்குல்ல. அதுக்குள்ள. உனக்கு என்ன. அவசரம்? னு என்னைத் திட்ட. ஆரம்பிச்சுட்டார்.
உடளே அங்கு காபி ஷாப் வைத்திருந்த. பையளிடம் நான் முன்னே ஒடி ஆறாம் நம்பர் பிளாட்பார்ம் போறேன் இஇவரை சித்த. கைத்தாங்கலா அழைசச்சிட்டு வந்து உதவுப்பான்னு கேட்க. அவனும் / அஅவரும் உஉதவும் போதே ஸ்ரீஏர்போர்ட் வந்து அசுர வேகத்தில் காரில் ஏற்றி பிளைட் அருகே இஇ க்கி உள்ளே அமர. வைத்தபோததான் அத்தனை பயணிகளும் எங்கள் முகத்தைப் பார்க்க. எத்தனை ஆவலாய் ( கடுப்பாய்! ) இருந்தனர் என்று தெரிந்தது.
ஒரு வழியாய் பிளைட்டில் அமர்ந்தவுடன் "" மாமோய் "" - என்று கத்தும் "" கவுண்டமணி கோவை சரளா "" நினைவு வந்ததை ஏனோ தடுக்கமுடியவில்லை.
இதனைத் தொடர்ந்து நாமும் நம்முடைய. பயணங்களின் தொகுப்பை ஏன் தொடர்ந்து எழுதக்கூடாது? - என்றும் தோன்றியது.
உண்மையிலேயே எங்களின் பயணங்ள் வெகு சுவராசியமாகத்தான் இருக்கும்.