கதை கதையாம் - 3

கதை கதையாம்- 3

    தாய்வழி  உறவு  10- வதோடு  முடிந்தல்லவா?
  அதுவரை  அனுபவித்த/ செய்த. ரகளைகளைப் பார்ப்போம்.
ஆறு வயதிலிருந்தே  'ஸ்டேட்  பஸ்ஸில்  அம்மாவிடம்  அனுப்பிவிடுவேன் என்று  மிரட்டும்  தெய்வானையம்மாவுக்குத்  தெரியாமல்  'ஸ்டேட்  பஸ் ' ட்ரைவரைக்  காக்கா ( பிரண்ட்)  பிடித்தால்  நம்மை  அம்மாவிடம்  அழைத்துச் செல்லமாட்டார்  என்றெண்ணி  தினந்தோறும்  காலை  எட்டரை  மணிக்கு  அந்த பஸ்  எங்கள்  காட்டைக்  கடக்கும் போது  ட்ரைவருகு  'சல்யூட் ' வைத்து  பதில்  வணக்கம்  பெறுவதை  வழக்கமாக்கிக் கொண்டேன்.ஸ்கூலுக்கே  அதன்பின்னர்தான்  ( கிட்டதட்ட. ஒரு கிலோ மீட்டர்  தூரம்  நடந்து செல்லவேண்டும்)   செல்ல ஆரம்பித்தேன்.
      திடீரென. நாலு நாட்களாக. ட்ரைவர்  பதில்  வணக்கம்   சொல்லவில்லை.   பஸ் ட்ரைவர் டூட்டி மாறி மாறி  வேறு வேறு நபர்  வருவர்  என்பதெல்லாம்  எஎனக்குத்  தெரியாது.   எனவே  பக்கத்து  காட்டில்  வசிக்கும்  என்னைவிட. இரண்டு வயது மூத்த. அண்ணன்களிடம்  இதுகுறித்துப் பேசி  'எஎக்காக. அவர்களிருவரும் இறு  ஒருநாள் மட்டும்  வணக்கம்   சொல்லி பதில் வணக்கம்   வரவில்லையெனில்  நானேதான்  இந்தப் பி.ச்சனையை  தீர்த்துக்கொள்ள வேண்டுமென முடிவு  செய்யப் பட்டது '  அன்று  ட்ரைவர்  அவர்களுக்கும்  பதில்  வணக்கம்  சொல்லாமலே  போய்விடவே 
எனக்கு ஒரே பயம்.
  கடைசியாக. அடுத்தநாள்  காலை  சரியாக 8 1/2 - மணிக்கு  ரோடீன்  நடுவே  'சல்யூட் '  அடித்தபடி  நின்றவள்தான்.  என்ன ஆனாலும் சரி  ்ட்ரைவரிடம் பதில்  வணக்கம்  வாங்காமல்  நகருவதில்லை  என்று முடிவு செய்து விட்டேன்.
    வேகமாக வந்தபஸ்  நான் நடுரோட்டில்  நிற்பதைப்  பார்த்து பத்தடி  முன்னாலேயே  நின்றுவிட்டது!  ட்ரைவர்  பஸ்ஸைவிட்டு  இறங்கி  வேகமாக. என்னை நோக்கி வருவதைப் பார்த்தவுடன்  ஒரே  குஷி.  நமக்காக இறங்கி  வருகிறாரே என்று.
   இவை யாவையும்  ஓளிந்து  வேடிக்கை   பார்த்துக் கொண்டிருந் என்  சகநண்பர்ள் - "" ராணியோவ்  ஓடிடு  அந்நாளு  உன்னய. அடிக்கத்தான் வரான் "" - என்று  கத்தும் சத்தம்  கேட்டு  மின்னல்  வேகத்தில்  வளர்ந்திருந்த. சோளக்காட்டிற்குள்  ஓடி மறைந்துவிட்டேன். பாவம்  பஸ்ஸிலிருந்துவேற. நாலுபேர்  இறங்கி  என்னைத் தேடினார்கள்!  (  எவ்வளவு  டென்ஷன்  அடைந்திருப்பார்கள்  என்று  வளர்ந்தபின்னர்தான்  உணர முடிந்தது.
      பின்னர்  பதட்டத்துடன்  என்னய நாலுபேரு  பஸ்ஸிலிருந்து  இறங்கிவந்து  புடிக்க வந்தாங்க. நான்  தப்பிச்சி  ஓடிவந்துட்டேன்  என்று  நடந்ததையெல்லாம்  கூற. 
   தெய்வானைம்மா  அடுத்தநாள்  காலை  பஸ்ஸை நிறுத்தி  ட்ரைவரிடம்  மன்னிப்பு கேட்டது  தனிக்கதை.  ன்றிலிருந்து   எனக்கு  வணக்கம்   சொல்லாமல்  எந்த ட்ரைவரும்  சென்றதில்லை!.
     முழங்காலுக்கு  மேலே உள்ள. கவுன் அல்லது  மினிஸ்கர்ட்  ஸ்லிவ்லெஸ்  பிளவுஸ்   இதுதான்  என்  காஸ்டியூம்  என்பதும்  எனக்கான. அடையாளமாக. அமைந்ததும்  வேதனையான விஷயமே.
    எங்க. அப்பாயி  இந்த. நாய்முள்  சிரங்கு + தொந்தி  இதுக்கெல்லாம்  இந்த ட்ரஸுங்கதான்  காரணமென்று  திட்டுவார்.
     உடைவிஷம்  கடைசிவரை  என்னுடைய. விருப்பப்படி
அமையவேயில்லை

   நான்  வந்தபின்னர்  அண்ணன்  தெய்வானம்மாவோடு  தங்கி  படித்து  குடும்பத்  ததகராறு வரவே  திரும்பினான்.
   நாங்கள்  வந்தபின்னர்  தாத்தா ரிட்டையர் ஆனாலும்   அவர்களது  வாழ்வு  சொல்லொன்னா  சோகத்தைச்  சந்தித்தது.
    நான் பிறந்தபோது  வாங்கிய. அந்த. ஐந்து  ஏக்ரா  காடும்   அவர்கள்  கையைவிட்டுப் போனது. இன்றைய. நாகினி கதையை மிஞ்சும்  வண்ணம்  நாகபாம்பு   என் பாட்டி  தலையிலிருந்து  கால்வரை  இறங்கிய. கதையை  நாளை  பார்க்கலாம்.