கதை கதையாம் - 2

கதை கதையாம்

  தந்தைவழி  தாத்தா  வானசாஸ்திரம்,  வைத்தியத்தில்  சிறந்து விளங்கியதால்   சத்தான. சுவையான உணவுகளை, காய் கனிகளை ( ஆர்கானிக்?  ) கொடுத்து  ஊட்டம்/ ஆரோக்கியமாக. வளர்த்தார்.
      பாவம்  என்னைத் தொடர்ந்து  வளர்த்த முடியாமல்  என்னைவிட ஐந்து வது  சிறிய எஎன்  தங்கையை  ஒரு ஐந்துவருடம்  வளர்த்துக் கொடுத்துவிட்டு   எனது  பத்தாவது வயதில்  தெய்வலோகப் பதவி  அடைந்துவிட்டார்.
   ஆனாலும்  பாட்டி ( அப்பாயி)  என் 20 - வயதுவரை  உடனிருந்து  காத்ததல்லாமல்  இறைவனிடம்  சேர்ந்த பின்னும்  தெய்வமாக. நாளதுவரை  என்னுடனே  பயணிக்கின்றார்.
      தெய்வானையம்மாவோ  நல்ல சிந்தனையைத் தூண்க்கூடிய. கற்பனைக் கதைகளை   அழகாக. மனதில்  பதியும் வண்ணம் கூறுவார்.  இது  பின்னாளில்  என்னை  'புத்தகப் பிரியையாக ' மாற. வழி வகுத்ததோ என்னவோ?.
      சினிமா பைத்தியமாக இருந்த. தெய்வானையம்மா  சினிமா கதை  சொன்னால்  நாமே  சினிமா  பார்ப்பது போலிருக்கும்  அவ்வளவு  அருமையாக சொல்வார்கள்.
   சொல்வது மட்டுமல்ல. சினிமாவுக்கு  அழைத்துச்செல்வதிலும் கில்லாடிதான்.
      ஆத்தூரில்  புதிதாக ஓபன்  பண்ணிய. ஏசி தியேட்டரில்  ரீலீஸாகிய 'ஊட்டிவரை  உறவு  ' மேட்னி ஷோ  பார்த்துவிட்டு சேலம் வந்தால் ( அம்மா அப்பாவைப் பார்க்க?  ) பிரபாத் தியேட்டரில்  'தூக்கு தூக்கி ' செகண்ட் ஷோ  பார்த்து விட்டுத்  திரும்பும்  தில்லாலங்கிடியாக்கும்.
       ஆனால்  தைரியம்  தன்னம்பிக்கை   இரண்டோடு  இரக்க குணத்தையும்  ஊட்டி  வளர்த்த. தெய்வானம்மா  உறவு  குடும் பிரச்சனைகளால் 10- வயதோடு  முற்றுப் பெற்று பின்னர்  நான் பிள்ளை பெறும்போதுதான்  பெற்றவர்களுக்குத் தெரியாமல்  தொடர்ந்தது. தாத்தா பாட்டி தாய்மாமன்  இருந்தும்  அந்த. உறவுகளின்  தாத்பர்யத்தை  அனுபவிக்கும்  பாக்கியமில்லாமலேயே  வளர்ந்தோம்.

    இரண்டு பாட்டிகளின்  கவனிப்பில் 'பம்ளிமாஸ்  ' போல பருத்து கலராயிருந்தாலும்  அவர்களைவிட்டுப்  பிரிந்தபின்னர்  'தெத்துப்பல்,  சிரங்கு,   நாய்முள் '  என. காட்சிதர. ஆரம்பித்தாகிவிட்டது.  தாத்தா  பேசும்வரை செவ்வாய்ப்பேட்டையில்  தோல் டாக்டரிடம்  காட்டி  ஆயின்மெண்ட்  வாங்கித் தருவார். பின்னர்  அதுவும்  நின்றது. 
  அப்பா 'ஆல்போசாங் ' என்ற பவுடரை  இரவுதோறும்  சுடுநீரில்  கலந்து தருவார்.எதற்கும் மமசியாத. சிரங்கு  வகையறா  அப்பாயியின்  வைத்தியத்தில் ( களிமண்  பூச்சுக் குளியல் + ஆவாராங் கொழுந்தை அரைத்து தயிரில்  கலந்து உடல் முமூவதும் பூசுதல்)  யறைந்தது.
   இன்றுவரை  புறஅழகைவிட. அக அழகே சிறந்தது.அதைவிட. மற்றவர்களை  உள்ளது  உள்ளபடி  ஏற்றுக்கொள்ளும்  பாங்கு  அவசியமென்றெல்லாம்  மமனதில்  பதிய வைத்து என்னுடைய வாழ்வியல்  நடத்தைக்கு  முக்கிய. பங்கு  வகிப்பவர்  எனது  தந்தைவழிப் பாட்டியாகிய. அப்பாயியே  .

   இனி  அடுத்து  எது  11- ம்  வயதில்  நான்  செய்த. பயணங்களுடன்  சந்திப்போம்.