ஆயில்யம் மாமியாருக்காகாது - என்று ஒட்டு மொத்தமாக ஒதுக்கக் கூடாது. ஜனன ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.
முதலில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குண இயல்புகளைப் பார்ப்போம்.
பேச்சு சாமர்த்தியமும் எதிரியையும் நண்பனாக்கிக் கொள்ளும் திறமையாளன் தெய்வ பக்தியும் சிற்றுண்டி பிரியனுமானஇவன் பெற்றோரின் அன்புக்குப் பாத்திரமானவாகிறான்.
யாருக்கும் பயப்படாதவனும், மற்றவரை ஏளனம் செய்பவனுமாவான் - என்று "யவன ஜாதகமும் '
நல்ல தேகவடிவ
முண்டே தவிர நன்றாகப் பேசத் தெரியாதவன், நன்றி மறப்பவன், பிறரை வஞ்சிப்பதில் சமர்த்தனென்று " பிருகத் ஜாதகமும் ' கூறினாலும் இரு நூலாசிரியர்களும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவன் சோகம் நிறைந்தவனாய் இருப்பானென்கின்றனர்.
"ஜாதக அலங்காரமோ ' பாத வாரியாகப் பபவனுரைக்கின்றது.
ஆனாலும் கூடவே புதனின் நட்சத்திரத்தில் பிறந்து ஜாதகத்தில் புதனின் பார்வையைப் பெறுவானாகில் விஷேஷ கல்வி உள்ளவனென்று
பாராட்டுகின்றது.
மேலும் பொதுப் பலனாக ஆயில்யத்தில் பிறந்தவர்களைப் பற்றி இப்படிக் கூறாமல் நட்சத்திரத்தின் " ஆதியந்த பரம நாழிகையை 60 - பாகமாகப் பிரித்து
அதனைக் கீழ்கண்டவாறு பொருள் கொள்ளவேண்டுமெறு " நிர்ணய சிந்து ' எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.
சிரம் - 5
முகம் -7
நேத்திரம் ( விழி) - 2
கழுத்து -2
இரண்டு கை - 4
புஜங்கள் - 8
இருதயம் -11
துடை - 6
லிங்கம் - 9
பாதம் - இவ்வாறு பங்கிட்டு பலனுரைக்கவேண்டுமென்கிறது.
இதில் எந்த நூலாசிரியரும் ஆண் பெண் என பேதம் பிரித்துரைக்கவில்லை.
இதற்கு மேல் கால. தேச நிற பேத வர்த்தமானமெனும் 16 - விதங்களையும் அனுசரித்தே பலனுரைத்தல் நலமாம்.
எல்லாவற்றிக்கு மேலாக " மனமிருந்தால் மார்க்கமுண்டல்லவா? ' மனதில் சஞ்சலமுடையோர் திருமணத்தின் போது கவணிக்க வேண்டிய. தகவல்களை "திரு ஜோஸ்யம் ராமு அய்யா ' அவர்களின் பதிவையும் என்னுடைய பக்கத்தில் லிங் செய்துள்ளேன்.
படித்து பலனடையவும். மேற்கூறிய வித ஆய்வு ஜாதகம் பார்க்க வருவோரை திருப்திபடுத்துவது தனி சிறப்பாகும். "பாம்பு கடித்து இறந்தவர்களை விட பாம்பு கடித்த பயத்தில் இறந்தவர்களே அதிகம் ' என்பார்கள்.
ஆயில்ய பயத்திலிருந்து மீண்டு வாருங்கள்.
நன்றி
அஸ்ட்ரோ
S.N. உஷா.