"வஸந்த நவராத்திரி ' என்பது சைத்ர மாத அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து "பிரதமை முதல் தசமி வரை ' அதி சிறப்பாக. இந்தியாவின் வடபகுதிகளில் கொண்டாடப் படுகின்றது.
இது "சைத்ர நவராத்திரி ' "ராம நவராத்திரி ' என்றும் கூறப்படுகின்றது. இராமனின் பிறந்த திதியான. நவமி "ராம நவமி ' இந்த. நவராத்திரியில் பிரதான விழாவாகக் கொண்டாடப் படுகின்றது.
இவ்விழாவின் காரணத்தை ( கதையை) ராய்பூர் மக்களிடமிருந்து கேட்டு அறிந்ததை சுருக்கமாகத் தருகின்றேன்.
முன்னொரு காலத்தில் "துர்வந்சிங் ' எனும் அரசன் வேட்டைக்குப் போகும் போது சிங்கத்தால் கொல்லப் பட்டான். எனவே அந்த தேசத்திற்கு "சுதர்சணன் ' என்பவன் ராஜாவாக முடிசூடப்பட்டான்.
இடையில் உஜ்ஜயினி மன்னனு ( மகள் லைலாவதி)
கலிங்க மன்னன் வைரசேனனும் ( மகள் மனோரமா) தத்தம் மமகள் வழிப் பேரன்களுக்கு பட்டம் சூட்ட போராடி இறுதியில் யுஜித் தன் பேரன் "சத்ரஜித் ' திற்கு அயோத்தியில் பட்டம் சூட்ட- மனோரமாவின் தந்தை போரில் இறந்துவிட்டதால் தன் மகன் சுதர்சனனோடு காட்டில் " பரத் வாஜ் ' முனிவரிடம் அடைக்கலமானாள்.
தகவலறிந்த யுஜித் முனிவரிடம் அவர்களிருவரையும் தன்னிடம் ஒப்படைக்கும் படி கூறினான்.
முனிவர் அபயம்மென வந்தவர்களை திருப்பியனுப்ப மாட்டேன். வேண்டுமெனில் போரிட்டு அழைத்துச்செல் - என்று கூறிவிட்டார்.
சுதர்சணனை "கீலீப ' மந்திரத்தை உஉதேசித்து தேவியை நோக்கி தவம்புரிய சொன்னார். சுதர்சணன் கீலீப மந்திரத்தின் "கிலீம் ' என்ற வார்த்தையை மட்டுமே உச்சாடனம் செய்து தவம் புரிய
முமம்மூர்த்திகளுக்கும் சக்தியை வழங்கும் மஹாதேவியானவள் தேவியாக சுதர்சணனுக்கு காட்சி தந்து சகல வல்லமைகளும், ஆயுதங்களும், புத்தி சாதுர்யமும் வழங்கி ஆசிர்வதித்தாள்.
இடையே பனாரஸின் மன்னன் தன் மகள் சசிகலைவை தேவியின் அருள் பெற்ற. சுதர்சணனுக்கு பேசி முடிக்க. பரத்வாஜ் முனிவருக்கு தூது அனுப்பினான். முனிவரும் சம்மதிக்க. சுதர்சணன் - சசிகலா திருமணம் இனிதாக நடைபெற்றது.
மன்னர் மகளான. சசிகலாவின் திருமணத்திற்கு வந்திருந்த. யுஜித் மீண்டும் முனிவரையும் சுதர்சணனையும் எதிர்த்து போரிட ஆரம்பித்தான். இம்முறை தேவின் அருட் கடாட்சமும் சசிகலாவின் பக்தி + வீரமும் பனாரஸ் மன்னனின் ஆதரவும் சுதர்சணனை எளிதில் வெற்றிபெற வைத்தது.
சுதர்சணன் கோசலையைத் தலைநகராகக் கொண்டு பேரும் புகழோடும் தேவியின் அருளோடும் ஆட்சி புரிந்தான். சசிகலாவும் சுதர்சணனும் மட்டுமல்ல. பனாரஸ் மன்னனும் தேவியின் புகழை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறுவிதமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சுதர்சணன் இழந்த நாட்டையும் நல்ல. மனைவியையயும் அடைய. தேவியின் அருளே காரணம் என உறுதியாக நம்பப் பட்டது.
இந்த. பரம்பரையில் வந்த. "ராம - லஷ்மணனும் ' கூட. சீதையை மீட்க. இராவணனை எதிர்த்துப் போரிட. இலங்கை செல்லும் முன் ஒன்பது நாட்கள் உபவாசமிருந்து தேவியைப் பூஜித்து அவளருள் பெற்றபின்பே சென்றனர்.
இன்றும் நாம் ஒன்பது நாட்களும் உபவாசமிருந்து அன்னையைப் பூஜித்தால் அவளருள் பெற்று வாழ்வில் எல்லா வளமும் பெறலாமென் நம்பிக்கையே இப்பகுதி மக்களை பக்தி பரவசத்துடன் "வஸந்த. நவராத்திரி ' கொண்டாட வைக்கின்றது.
நாளை இவ்விரதம் கடைபிடிக்கும் முறையும் ஒன்பது நாள் வழிபாட்டையும் பார்க்கலாம். சுத