சந்திரன்

ஒரு குழந்தை பிறந்தவுடன் ( பிறந்த நேரம் - இடம்- நாள்)  கணித்துப் பலனறியும் ஜாதகத்தில் நவகோள்களுடன் லகினமும் முக்கிய பங்கு வகித்தாலும் சூரியனுக்கினையான சுபக்கோளாகவும் பாபியாகவும் (வளர் பிறை / தேய்பிறை)  மிக முக்கியமான சந்திரனைப் பற்றி சிறிது பார்ப்போம்.
       சந்திரன் மாதுர்க்காரகன் ( பகலில் பிறந்தோருக்கு)   ஒரு ரராசியில் இரண்டேகால் நாளிருப்பான். அவனது ஆட்சி, உச்சம் ,  நட்பு   பகை இராசிமண்டலத்தில் 360 - பாகைகளிலும் சந்திரன் நிலை யாவும் ஜோதிட பால பாடத்திலே அறிந்த தகவல்களாகும். இதனை மனதில் கொண்டு தொடர்ந்தால்  " வானம் வசப்படும் ' என்பது போல் சந்திரன் நம் மனதில் எளிமையாக வேரூன்றி விடுவார்.இன்று தண்ணீரீனால்தான் பலநோய்கள் பரவுகின்றன என்றனைவரும் ஏற்றுக்கொண்டு  கவனமுடனிருக்கின்றோம்.  முன்பெல்லாம் சரியாகக் கழுவப்படாத நீர்த்தொட்டி -பனை  குழந்தையைக் குளிப்பாட்ட தண்ணீரைச் சூடு பண்ண. விறகுகள் ( கிராமங்களில் தென்னை : பனை சருகுகள்)  
          
என பல விதங்களிலும் 
சரியான அமைப்பின்மையால்  ஜோதிடர் " பாலாரிஷ்டம் ',  தண்ணீர் தோஷம் போன்றவற்றைக் கண்டிப்பாக குறித்து கொடுப்பார். பழம் நூல்களில் அரிஷ்டமுள்ள குழந்தைகளின் ஆயுளை  நாள் / மா / வருடக் கணக்கில் தெளிவாக சந்திரனின் நிலையோடு ஒப்பிட்டுக்கூறியுள்ளன.
    இன்று மருத்துவத்தின்  அரிய முயற்சியால் சிசு மரணம்,  போலியோ,  பெரியம்மை போன்றவைகளின் தாக்கம் வெகுவாகக் குறைக்கப் பட்டுள்ள நிலையில் ( ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை ஒரே பேஷன் தண்ணீரில் குளிப்பாட்டும் அழகே தனி)   தண்ணீர் தோஷம் போன்றவற்றைப் பேசும் நிலையில்லை.
    
இப்படி வளர்ந்தபின் சந்திக்கும் சுப அசுப யோகங்களில் சந்திரனை மையப்படுத்தியவைகளில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
  முதலில் சந்திரன் செவ்வாயுடன் சேர்ந்து
ஏழில் இருந்தால்
  "சந்திரமங்கள யோகம் ' எனப்படும் இவ்வமைப்புடையோர் செவ்வாய்  சுபனாகில்  அரசியலில் ஏதாவதொரு நிலையிலிருப்பர். ( ராஜரீகம்   -  அரசானை பிறப்பிக்க வல்ல பதவி? ) 
     சந்திரனுக்கு கேந்திர ஸ்தானங்களான 2 - 4 - 7 -10 - ல்  நல்ல நிலையிலிருப்பின் தலைமைப் பதவியிலும் மாறுபடின் தாதாவாகவேனும் ( கேசரி யோகம்! )  திகழ்வர்.
     சுக்கிலபட்ச சந்திரனாக இருந்து
6 - 7 - 8 - ம் ராசிகளில் செவ்வாயிருந்தாலும் மேற்படி சந்திரனுடன் குரு சுக்கிரன் கூடி
இருந்தாலும் பார்தாலும் " ராஜயோகமாகும் ' . சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து நிற்கசூரியனும் குருவும் 9 அல்லது 10 - லிருக்க இதுவும் " ராஜயோகம் ' எஎனப்படும். 

ராஜயோகம் - ராஜயோகம் என்றவுடன் ராஜா மாதிரி மற்றவர்களுக்கு ஆணையிட்டு வாழும் வாழ்க்கையை மட்டுமே யோசிப்பார்களேயன்றி ராஜவைப் போல் பல கலைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பற்றியோ மற்றவர்களை அரவனைத்துச் செல்லும் குணத்தைப் பற்றியோ  எடுத்த காரியத்தை தக்க தகுதியானவர்களது ஆலோசனையுடன் திறம்படச் செய்து முடிக்கும் வல்லமை பற்றியோ யோசிப்பதில்லை என்பது நிஜம்.
      அடுத்து பாருங்கள் சந்திரனுக்கு இரண்டில் சனியிருந்தால் அவனுக்கு தந்தையின் பூர்வீக சொத்துக்களில்லாவிடினும்
தன்னுடைய சுய அறிவால் ஏதேனும் ஒரு துறையில் சாதனை செய்து செல்வமும் புகழும் சம்பாதித்து மேன்மையுடன் வாழ்வான்
   இவ்வமைப்புடைய ஜாதகத்தைக் காணும் போது அவனது தந்தையின் தகுதிக்கு மீறிய கல்விச் செல்வத்தை பெற்றிருப்பதை பார்க்கலாம்.

   சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்தோ அல்லது செவ்வாயும் சனியுமிணைந்தோ ஏழாம் வீட்டிலிருந்தாலும் அன்றி ஏழாவது வீட்டைப் பார்த்தாலும்  அந்த ஜாதகனுக்கு மனைவியிருந்தால் குழந்தையில்லை என்கிறதொரு பாடல். இரண்டு குழந்தைகளைப் பெற்றபின்னர் விவாகரத்தை நாடும் தம்பதியர்,   குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்ளின் ஜாதகங்களில் இவ்வமைப்புகளைக் காணலாம்.
      சந்திரனை சனியும் செவ்வாயும் பார்க்க நல்லோர் / தசையிலார் பார்க்கவில்லை - இவ்வமைப்புடைய ஜாதகன் பிறக்கும் போது தாய்வழி தாத்தா வீட்டில் இருந்த செல்வாக்கு மந்திரம் செய்தது போல்  இவன் வளர வளர மறையுமாம். ( மாமன் உழைக்காமல் சாப்பிடுவானாக்கும்! ) .  உடல் நலமும் சீராயிருக்காதாம்.
      வீமகவியோ
   சந்திரன் லக்கினத்திலிருந்து  ஆறாமிடத்தில் லக்கின பாபிகளுடன் சேர்ந்திருந்தாலே  ஜாதகனை வசிக்கும் வீட்டை விட்டு வெளியேற வாழச்சொல்கிறார். அதற்கு சாட்சியாக அவன் வசிக்கும் வீட்டிலிருந்து ஆறு வீடுகளுக்குள் ஒரு வாரிசில்லாத குடும்பமும் தென் புறத்தில் கோவிலும் உண்டென்கிறார் ( பெரும்பாலும் ஜாதகர்  தான் செய்யும் செயகளில் தோல்விய தழுவுவதாகவும் காரணம் புரியவில்லை - அஉழைப்பிற்கேற்ற பலன் கிட்டவில்லை - குழப்ப மனநிலையோடு வரும்போது ஒத்துப் போகின்றது.  இடமாற்றம் ஆறுமாதங்களுக்குள் நிகழ்ந்திருந்தால் குறைந்தபட்சம் குடியிருக்கும் வீட்டில் மராத்து வேலையேனும் பண்ணுவது நற்பலனைத் தரும்) வாடகை வீடாயினும் பரவாயில்லை.
        சந்திரனுக்கு 1 4 - 7 - 10 -ல் குரு நின்றாலும் அன்றி குரு நின்ற ராசிக்கு 1 - 4 - 7 - 10 - ல் சந்திரன் நின்றாலும் " கசகேசரி யோகம் ' எனப்படும்.
   இவ்வமைப்புடையோர் வாழ்வில் திடீர் திடீரெனப் பிரச்சனைகள் தோன்றிமறையும் என்றும்
உருவத்தில் பெரிய யானை
யானது  சிங்கத்தைக்  கண்டவுடன் மிரள்வதுபோல்  இவர்களைத் தாக்கும் சிக்கல்ளிலிருந்து சுலமாக மீண்டுவருவர் எறும் இருவிதமாகப் பலனுரைப்ர்.
     எவ்வாறாயினும் சந்திரன் நிலைமட்டுமேயன்றி ஏனையகோள்களின் நிலையறிந்து பலனுரைப்பதே சரியாம்.